Friday, 21 September 2012

*** உணர்வற்ற பொழுதுகள் .. *** (இரண்டு)

*** உணர்வற்ற பொழுதுகள் .. *** (இரண்டு)


புத்தாண்டின் உற்சாக கொண்டாட்டங்கள் ,,

தொடர்ந்திருக்க,

நான் வெறுமையோடு,

கிளம்பினேன்..

என் கிராமத்திற்கு சென்றேன்..

நகர்புரங்களில்தான் கொண்டாட்டம்..

அந்த கிராமத்தில்,

எப்பொழுதும் போல உழைத்து கொண்டிருந்தனர்,

அந்த பாமரர்கள்..

**
சற்றே தொலைவில் இருந்த,

மலை அடிவாரத்தில் உள்ள,,

என் உறவினர் தோட்டம் சென்றேன்.

தோட்டம் என்று சொல்ல இயலாது,

காய்ந்து போய் இருந்தது..

இருந்தாலும் மழை காலத்தை   எதிர்பார்த்து,

நிலத்தை பண்படுத்தி கொண்டிருந்தார் அவர்.

வியர்வையால் மினுமினுத்த,,

கருத்த தேகத்தில்,

சோர்வற்று உழைத்து கொண்டிருந்தார்.

**
என்னை பார்த்ததும்,

மகிழ்ச்சி கொண்டு நலம் விசாரித்து,

அவர் வேலை செய்தபடியே,

என்னுடன் பேச்சு கொடுத்தார்..

'நமக்கென்ன புதுவருஷம், கொண்டாட்டம் எல்லாம்,

எப்போதும் போல உழைத்து கொண்டே இருக்க வேண்டியதுதான்,',

என்றபடி கிராமிய தத்துவ பேச்சில்  ,

என் மனதை கொள்ளை கொண்டார்.

**
அன்று முழுதும்,,

யாருமற்ற அந்த பிரதேசத்தில்,,

சுற்றி திரிந்தேன்..

ஆங்காங்கே தொலைவில் ஒன்றிரண்டு ,,

மனிதர்கள்,,

கால்நடைகளோடு தென்பட்டனர்..

அவர்களோடு பேச்சு கொடுத்தபடி,,

அன்றைய நாள் கழிந்தது..

**
இப்பொழுது,

என் இறுக்கம் தளர்ந்து,

அவர்களிடம் இருந்து விடைபெற்று,

வீடு திரும்பினேன், சற்று  தெம்போடு..

**
வீடு வந்ததும்,,

நிறைய சிந்தனைகளில் மனதை செலுத்தி,

ஒரு முடிவிற்கு வந்தேன்..

மீண்டும் துடிப்புடன் செயல்படுவது என்று.

அந்த கிராமத்து உறவினர்,,

மனிதர் வெகு எளிதாக,,

வாழ்வியல் தத்துவங்களை,

பதிய வைத்ததே  என் இந்த ,,

முடிவிற்கு காரணம்..

*
தோல்விகள் தொடரத்தான் செய்யும்..

சோர்வுகள் தொடரக்கூடாது.

**
(இனி,,

உணர்விருந்தால் தொடரும்..

மீண்டும் சந்திக்கலாம்)***

No comments:

Post a Comment