Friday, 21 September 2012

பின்னிரவு பொழுதில்

அடங்க மறுக்கிறது,,

மனது..

தீரா நினைவலைகளை,

எழுப்பி விட்டு,,

என் மன சுவற்றில்,,

படபடவென்று மோதவிட்டு,,

என் உறக்கத்தை சிதறடிக்கிறது..

**
எங்கோ தூரத்தில்,

ஊளையிடும் ஓநாய் ஒலியை போல,,

கதறுகிறது மனது..

வெப்பம் கொண்ட,

பாலை நிலத்தில்,

இதயம் அறுந்து துடிக்கிறது.

**
எந்த சமாதானத்தையும் ஏற்க மறுத்து,,

இழந்து விட்ட,

இளமை நினைவுகளை,,

எழுப்பி விட்டு,,

அரற்றி கொண்டிருக்கிறது..

**
நான் ,,

மீண்டும் ஒருமுறை,,

உறக்கம் கலைந்த,,

பின்னிரவு பொழுதில்,

கலங்கியபடி..

**

பரபரவென்று

பரபரவென்று திரிகிறார்கள்,

மனிதர்கள்..

அமைதியாக திரிகின்றன,

உயிரினங்கள்..

நிசப்தமாக இயங்குகிறது,

பூமி..

அர்த்தத்துடன் வேடிக்கை பார்க்கிறது,

பிரபஞ்சம்..

*** உணர்வற்ற பொழுதுகள் .. *** (இரண்டு)

*** உணர்வற்ற பொழுதுகள் .. *** (இரண்டு)


புத்தாண்டின் உற்சாக கொண்டாட்டங்கள் ,,

தொடர்ந்திருக்க,

நான் வெறுமையோடு,

கிளம்பினேன்..

என் கிராமத்திற்கு சென்றேன்..

நகர்புரங்களில்தான் கொண்டாட்டம்..

அந்த கிராமத்தில்,

எப்பொழுதும் போல உழைத்து கொண்டிருந்தனர்,

அந்த பாமரர்கள்..

**
சற்றே தொலைவில் இருந்த,

மலை அடிவாரத்தில் உள்ள,,

என் உறவினர் தோட்டம் சென்றேன்.

தோட்டம் என்று சொல்ல இயலாது,

காய்ந்து போய் இருந்தது..

இருந்தாலும் மழை காலத்தை   எதிர்பார்த்து,

நிலத்தை பண்படுத்தி கொண்டிருந்தார் அவர்.

வியர்வையால் மினுமினுத்த,,

கருத்த தேகத்தில்,

சோர்வற்று உழைத்து கொண்டிருந்தார்.

**
என்னை பார்த்ததும்,

மகிழ்ச்சி கொண்டு நலம் விசாரித்து,

அவர் வேலை செய்தபடியே,

என்னுடன் பேச்சு கொடுத்தார்..

'நமக்கென்ன புதுவருஷம், கொண்டாட்டம் எல்லாம்,

எப்போதும் போல உழைத்து கொண்டே இருக்க வேண்டியதுதான்,',

என்றபடி கிராமிய தத்துவ பேச்சில்  ,

என் மனதை கொள்ளை கொண்டார்.

**
அன்று முழுதும்,,

யாருமற்ற அந்த பிரதேசத்தில்,,

சுற்றி திரிந்தேன்..

ஆங்காங்கே தொலைவில் ஒன்றிரண்டு ,,

மனிதர்கள்,,

கால்நடைகளோடு தென்பட்டனர்..

அவர்களோடு பேச்சு கொடுத்தபடி,,

அன்றைய நாள் கழிந்தது..

**
இப்பொழுது,

என் இறுக்கம் தளர்ந்து,

அவர்களிடம் இருந்து விடைபெற்று,

வீடு திரும்பினேன், சற்று  தெம்போடு..

**
வீடு வந்ததும்,,

நிறைய சிந்தனைகளில் மனதை செலுத்தி,

ஒரு முடிவிற்கு வந்தேன்..

மீண்டும் துடிப்புடன் செயல்படுவது என்று.

அந்த கிராமத்து உறவினர்,,

மனிதர் வெகு எளிதாக,,

வாழ்வியல் தத்துவங்களை,

பதிய வைத்ததே  என் இந்த ,,

முடிவிற்கு காரணம்..

*
தோல்விகள் தொடரத்தான் செய்யும்..

சோர்வுகள் தொடரக்கூடாது.

**
(இனி,,

உணர்விருந்தால் தொடரும்..

மீண்டும் சந்திக்கலாம்)***

** உணர்வற்ற பொழுதுகள் **


சற்றே சிதிலமடைந்து,

சமூகத்தின் ஏளன பார்வையை,

தரிசித்து,

உணர்விழந்த நாட்களில்..

விரக்தி மேலிட,

இயலாமை கோபம் கொள்ள,,

என் கனவுகள், மெல்ல வீழ்ந்த அந்த சமயத்தில்,

உலகம்,,

இரண்டாயிரமாவது வருடத்து,

கொண்டாட்டங்களில் முழ்கி இருந்தது..

**
விடிந்தால்,,

புதிய நூற்றாண்டு என்ற பொழுதில்,,

அந்த இரவு,,

ஏக்கங்கள் நிறைந்த,,

இரவாக மாறி இருந்தது எனக்கு..

தனிமை துணையாக,,

சிதிலமடைந்த கனவுகளின் தாக்கம்,

மனதை பிசைய,,

மெல்ல துளிர்த்திருந்த காதலும் கூட,

மறைய துவங்கி இருந்தது..

**
புதிய நூற்றாண்டு விடிந்தது..

உலகெங்கும் உற்சாக துள்ளல் போட,,

இங்கே இவன் மகிழ்வு தொலைத்து,,

சலனமின்றி உறங்கி கொண்டிருந்தான்..

வீழல் துவங்கியது..

***
இனி.. ??

உணர்விருந்தால் தொடரும்..
**

Thursday, 13 September 2012

என் பார்வைகள்



பயணங்களில் என் பார்வைகள்,

சில அல்லது பல சமயங்களில்,

வித்தியாசமான கோணங்களில்,,

லயித்திருக்கும்..

ரயில் பயணங்களை பொறுத்தவரை,

வேகமாய் பின் செல்லும்,

மரங்கள், வயல்கள்,

எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..

மற்றபடி சாதாரண பயணங்களில்,

ஏதோ ஒரு கணத்தில்,,

மெல்ல வானம் பார்க்கும்,,

என் பார்வையின் கோணங்கள்,

மேகத்தின் வடிவமைப்புகளில்,

கவனம் செலுத்தும்.

அழகிய ஓவியங்களாக,

சிறுவயதில் படித்த,,

பறக்கும் குதிரைகள் போல,,

பயங்கரமான,,அசுரனை போல,

அந்த மேக ஓவியங்கள்,,

என்றும் மனதை கவர்பவை..

இந்த மேக கூட்டத்தை,,

ரசிப்பதில்,,

இன்றும் நான் சிறுவன்தான்..

அவ்வப்போது உள்ளிருக்கும்,,

சிறுபிள்ளைத்தனம்,,

அல்லது,,

குழந்தைதனம்தான்,,

என் பார்வையின்,  

வித்தியாச கோணங்களுக்கு,,

காரணம் என்பதை ,,

வெகு காலம் கழிந்து,,

உணர்ந்து கொண்டேன்..


**
இந்த புகைப்படம் ,

ஏதோ ஒரு கோணத்தை மனதில் நிறுத்தி,

எடுத்து,, பின் பார்த்தபோது,,

அதை விட அழகான வேறு வடிவத்தில்,

உயிர்பெற்று வந்தது..
**
இனி அவ்வப்போது,,

என் அலைபேசி வழியே எடுத்த,,

புகைப்படங்களும்,,

இங்கே அலங்கரிக்கும்.

*
முடிந்தவரை சிரமப்பட்டு,,

ரசித்துவிடுங்கள்..

*
மற்றபடி நன்றி என்றென்றும்..

Friday, 7 September 2012

விடிந்த ஒரு காலை

விடிந்த ஒரு காலை பொழுது,,

வராதா என்று,,

ஏங்கி தவிக்கும் மக்கள்,,

உலகில் அநேகம் பேர்,,

**
இதில்,,

மொழி,, நிறம்,, இனம்,,

என்று வகையாக ,,

சிறுபான்மை இனமாக உள்ளவர்கள்,,

பிரிக்கப்பட்டு,,

அவர்கள் மீது,, கொடும் தாக்குதல்கள்,

நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன,

இந்த உலகில்,

மத,, இன,, மொழி வெறி பிடித்த,,

மற்றும் பதவி பித்து பிடித்த,,

அரசியல்வாதிகளால்..

*
ஒரு புறம் செல்வ செழிப்பில்,

ஒரு புறம் மிக அமைதியாக,,

மக்கள் இருக்க,,

மறுபுறம் அமைதியின்றி,,

கொடும் சித்திரவதைகளை தாங்கி கொண்டு,,

ஏழ்மை,, பசியோடு,,

மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்,,

இந்த விஞ்ஞான உலகில்..

*
அனைவருக்கும் பொதுவானதொரு,,

அழகிய விடியல் தெரிய,,

அனைவரும் பிரார்த்திப்போம் தினமும்..

காதல், கவிதை

புனிதம் என்றிருந்த ,,

காதல்,,

என்றோ அடிமையாகி விட்டது,,

பணத்திற்கு..

*
இன்று,

பணம் படைத்தவரிடம்,,

தாரளாமாக புழங்குகிறது,,

காதல்..

*
பணமற்றவனுக்கோ,,

காதல், கவிதைகளில் மட்டுமே.

அறிவீனர்களின் செயல்..

மனிதனை,,

சக மனிதனாய்,,

நேசிக்க தெரியாதவர்களுக்கு,,

காதல் மட்டும்,,

பிறப்பெடுக்கிறது..

காதல்.. அறிவீனர்களின் செயல்..

காதல்.. வீழல்

காதல்..

வீழலின் துவக்கம்..

துயரங்களின் பிறப்பிடம்....

சோர்வுகளின் துவக்கம்..

மெல்ல அமைதியை இழக்கும் மனம்...

*
ஆக..

காதல்.. வீழல்

காதல் பின்னணி

உன்னிடம் நிறைய பணம் இருக்கிறதா?

என்னிடமும் பணம் இருக்கிறது,,

உன் வேலை நிரந்தரமா?

என் வேலை நிரந்தரம்..

ஆக,, இறுதி வரை பிரச்சினை வராது,,

நமக்குள்..

எனவே,,

நாம் காதலிக்கலாம்..

**
காதல்.. பணத்தின் பின்னணியில்.. கலிகாலம்..

காமம்

காதல்

என்றொரு மாய பிம்பத்தின்,,

பின்னணி,,

வெறும் காமம் மட்டுமே..

வேறு ஒன்றும் இல்லை,,

இந்த கலிகாலத்தில்..

* வாழ்க பாரதம் *

இந்த தேசம்,

உள்ளடக்கிய வரலாறு,,

சமூக நீதி கோட்பாடு,,

அறிவியல் பொக்கிஷங்கள்,,

மருத்துவ சுவடி குறிப்புகள்,,

விலைமதிப்புள்ள,, அரிய பொக்கிஷங்கள்,,

ஆபரணங்கள்,

வீரமிகு கலைகள்,,

இன்னும் எத்தனையோ,,

தொடர்ந்து நடந்த படையெடுப்புகள்,,

உள்நாட்டு கலவரங்களில்,,

தொலைத்து விட்டோம்..

*
நிறைய களவும் கொடுத்தாயிற்று,

அந்நியர்களுக்கு..

ஒரு வழியாக,,

இந்த தேசம் அன்னியர் பிடியில் இருந்து,

விடுபட்ட பின்னர்,,

என்ன செய்திருக்க வேண்டும் ,,

நம் அரசியல்வாதிகள்.. ?

*
இந்த அரிய பொக்கிஷங்கள்,,

தற்போது எங்கே என்று அறிந்து,,

அதை செம்மை படுத்த முயற்சித்திருக்க வேண்டும்..

களவு போன நம்,,

மதிப்பு மிக்க செல்வங்களை,,

மீட்டு தந்திருக்க வேண்டும்..

உயரிய வரலாற்றை,,

உண்மை வரலாற்றை,

சிறந்த முறையில் கற்பித்திருக்க வேண்டும்.

*
இதை எல்லாம் செய்தார்களா என்று,,

கேட்டால்,,

பதில் உங்களுக்கே தெரியும்..

*
பத்து தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதிலேயே,,

குறியாய் இருக்கும்,,

ஊழல் அரசியல்வாதிகளுக்கு,,

நம் தேசத்து வரலாற்றின் மீது,,

என்ன அக்கறை வந்துவிடபோகிறது..

*
எது எப்படியோ,,

உரக்க சொல்வோம்..

* வாழ்க பாரதம் * என்று பெருமிதமாக..

** தீரா காதல்.. தீரா நினைவுகள்.**

அன்று ,,
பள்ளி இறுதி பருவம்..

அந்த அழகிய மலைவாசஸ்தலத்தில்,,


தினசரி பள்ளி முடிந்து,,


நீ வரும் பேருந்து வரை,,


காத்திருப்பேன்,.


*

புளிமூட்டையாய் பயணிகளை,,

நிரப்பி கொண்டு வரும் பேருந்தில்,,


கடைசி ஜன்னலோர இருக்கையில்,,


என்னை பார்ப்பதற்கென்றே,,


அமர்ந்திருக்கிறாய்,,


என்று எனக்குள்,


கற்பனை குதிரைகளை தட்டியபடி,,


அந்த குளிர்ந்த தூறல் காலங்களிலும்,,


என் முகத்தில் பட்டு தெறிக்கும்,


மழை சாரலில் நனைந்த படி,,


பெரும்பாலும்,,


பேருந்து படியில் மட்டும் ஒற்றை கால்


வைத்தபடி,,


உன்னை கவர நான் செய்த,,


சாகசங்களை,, நீ ரசித்தது,,


பின்னொரு நாளில் தெரிந்து,


மகிழ்வுற்றேன்..


**

அன்றுதான்,,

என் வாழ்க்கையில் மிக மகிழ்வாக இருந்தேன்..


** காதல்.. அழகிய காதல் **

பெண்கள்..புதிர்..

ஒட்டாமலே திரிந்தவள்..

வருடத்தின் ஏதோ ஒரு நாளில்,,

மட்டும் எட்டி பார்த்தவள்,

எங்கோ தொலைவில் ,,

தானுண்டு, தன் வேலையுண்டு ,,

என்றிருப்பவள்..

**
அவ்வப்போது பாசமழை பொழிபவள்,

அலைபேசி வழியே மட்டும்..

*
நெருங்கிய உறவுகளில் ஒருவள் இவள்..

**
நெருங்கிய உறவில்,,

முக்கியமான பெரியவர் இறப்பு நிகழ்கிறது,ஓர்நாளில்..

அருகில் உள்ளவர்களே,,

கனத்த துயரத்தை தாங்கியபடி,,

அமைதியாக நின்றிருக்க,,

**
எங்கோ தொலைவில் இருந்தபடி,,

ஒட்டாமல் இருந்த , இவள்,,

கதறி அழுகிறாள்..

எப்படி ?

**
இன்றைய தலைமுறை பெண்கள்,,

பெரும் புதிர்..

குழப்பம்..

அதிகாலைக்கு ,,

சற்று முன்பே எழுந்தேன்..

பிரம்ம முஹுர்த்தம் என்று,,

சொல்லக்கூடிய அந்த வேளையில்.

மனம் நிறைய,

ஆர்ப்பரிக்கும் எண்ணங்களை,,

வெள்ளை தாளில்,,வடிக்க,,

ஆவலோடு அமர்ந்தேன்..

வசதியாக அமர்ந்தேன்..

சூடாக ஒரு தேநீர் பருகினேன்..

*
புத்தம் புதிய பேனாவோடு,,

அழகிய வெள்ளை தாளில்,

சுழி போட்டு துவங்கியாயிற்று..

*
சற்றே சிறு தடங்கல்,,

ஆர்ப்பரிக்கும் எண்ணங்களில்,,

எதை முதலில் துவங்குவது,,

கோர்வையாக எங்கிருந்து,, துவக்குவது..

சிறிய குழப்பம்..

சிந்தனை செய்தேன்,,

பிடிபடவில்லை.

நேரம் கடந்து கொண்டிருந்தது..

ஒரு வழியே பிடிபட்டு,,

எழுத துவங்கினேன்..

இருப்பினும் மனம் ஒப்பவில்லை..

*
எழுதிய வெள்ளை தாளை,,

கசக்கி எறிந்தேன்..

இப்போது வெறுப்பு மெல்ல,,

என் மனதை ஆட்க்கொள்ள,,

மீண்டும்,,

சிந்தித்தேன்..

*
நேரம் கடந்து கடந்து,,

நன்றாக விடிந்து விட்டிருந்தது..

நான் இன்னும் எழுத துவங்கவே இல்லை..