Thursday, 30 August 2012

மனைவியின் கேள்வி

இன்றைய பொழுது,,

மதியத்திற்கு மேல்,,

அழகாக இருந்தது,

மழை தூறலின் உதவியால்..

**
இதமான  குளிர் தென்றலோடு,,

மெல்லிய  மழை சாரலில் ,,

நனைந்தவாறே ,,

அலுவலகம்   முடிந்து,

கோயம்புத்தூர் நகர வீதிகளில்,,

வலம் வந்து,,

வழக்கமான தேநீர் கடையில்,,

நிறுத்தினேன், என் வாகனத்தை.. 

**
கோவை மக்களின்,,

இயல்பான உபசரிப்பு   வார்த்தைகளில்,

வழக்கமான அந்த கடைக்காரர்,

தேநீர் கொடுத்து உபசரித்தார் ..*(காசு கண்டிப்பா கொடுக்கணும்)_

**
தண்ணீரோடு, கதை பேச,,

நண்பர்கள் சிலரும்,, வந்து சேர ,,

களை கட்டியது,

வெட்டி பேச்சு..

**
வெட்டி பேச்சு தொடர்ந்த ,,

சில நேரத்தில்,,

அலைபேசி அழைப்பு,,

மனைவியிடம் இருந்து..

நண்பர்களிடம்  இருந்து சற்று தள்ளி நின்று,,

எங்க இருக்கீங்க என்ற மனைவியின் கேள்விக்கு,,

வீட்டுக்கு போயிட்டு  இருக்கேன் என்ற உண்மை (!!!?) உரைத்தேன்..

**
" சரி சரி,, வீட்டுக்கு போனதும்,,

கிரீன் டி போட்டு குடிங்க,. வெளிய கண்ட கண்ட பேக்கரீல  டி சாப்டாதீங்க  

நானும் அலுவலகம் முடிந்து,

பஸ்ல  வந்துட்டு இருக்கேன்"என்றாள்,..

**
மிக பணிவாக,,

சரி என்றேன் ,,

கடை தேநீரை,,

சுவைத்தபடியே..

மிக சிறந்த மனிதன் அல்ல

நான்..

மிக சிறந்த மனிதன் அல்ல..

மிக மோசமான மனிதனும் அல்ல..

அறிவாளியும் இல்லை..

முட்டாளும் இல்லை..

இரண்டும் கெட்டான் என்று சொல்லக்கூடிய,,

இடைநிலை மனிதன் என்ற நிலையில் இருப்பினும்,,

சற்றே தெளிவுடன்  இல்லாது,,

குழப்பத்தோடு,,

சிறு பதட்டம் கூடிய,,

மனதை  பெற்று,,

வீழ்ந்தவன் நான்..


Wednesday, 29 August 2012

சாதீயம் அற்ற ஒரு சமுதாயம்

சாதீயம் அற்ற ஒரு சமுதாயம்,,

வேண்டும் என்பது,,

மனிதம் உள்ள மனிதர்களின்,,

கனவுதான்..

இந்த கனவு  ,, நினைவாக  வேண்டும் ,

என்பதுதான்,,

கடவுளிடம் நான் வேண்டும்,,

ஒரு பிரார்த்தனை..

கடவுள் என்ற ஒருவர் மீது,,

நிச்சயம் எனக்கு நம்பிக்கை,,

இருக்கிறது,..

இடையில் மனிதனால்,,

வந்த இடை செருகல்கல்தான்,,

சாதீயமும்,,

மூட பழக்கவழக்கங்களும்..

மற்றபடி,,

கடவுளை மனதார நம்பி,,

அன்றைய அரசர்களால்,,

மக்களால்,,

கட்டப்பட்ட, பண்டைய,,

கோவில்களுக்கு சென்றுவரும்பொழுது  ,,

ஆழ்ந்த  இறையருளை  .,,

உணர்கிறேன் .. நான்...

தூறலில் நனைந்தபடி

பொழுது புலர்ந்தபோதே,,

ஏனோ,, குதிகாலில் துவங்கிய வலி,,

மெல்ல வியாபித்து,, முட்டிவரை பயணித்து,,

என் தினசரி,, அதிகாலை நடைக்கு,, தடை விதித்தது..




 
**

சற்றே சிரமப்பட்டு,, பால்,, தினமலர் வாங்கிய பொது,,

அப்போதுதான் ஆனந்த விகடன் புத்தக கட்டு வந்திறங்கியது..

சற்றே பெருமிதத்துடன்,,

இந்த வார ஆனந்த விகடனை வாங்கினேன். 
(( கட்டுகளை பிரித்தும் முதல் புத்தகம் , நான்தானே வாங்கினேன். பெருமை இருக்காதா என்ன ?)

மெல்ல வீடு வந்தபோது,, லேசாக தூர ஆரம்பித்தது தூறல்,,

மனைவியிடம் வழக்கம் போல கிரீன் டி எதிர்பார்த்து அவஸ்தையோடு,

காத்திருந்த பொழுதில்,, பரபரவென்று,, மேலோட்டமாக,, விகடனை மேய்ந்து,,

பின் தினமலரை மேய்ந்த போது,,

அதிசய நிகழ்வாக,, ப்ரு காபி வந்தது.. 

( தினசரி கிரீன் டீயின் கொடுமையை அனுபவிப்பவன் நான் )

காபி பருகி,,  பரபரவென்று  கிளம்பினேன்..

மனைவியை அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு,,

இரு சக்கன வாகனத்தை விரட்டினேன்,, 


தூறலில் நனைந்தபடி....

சலனமற்ற பார்வைகள்..


சலனமற்ற பார்வைகள்..

என் புதிய வலைபகுதி..


ஏதோ ஒரு உந்துதலில் புதிய வலைபகுதியை துவங்கி விட்டேன்..


எதற்கு,,, தெரியவில்லை..


என் பார்வையில் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக இருக்கட்டும் இப்போதைக்கு ..


இருப்பினும் எத்திசை செல்லுமோ இந்த வலை,, என்பது எனக்கே சரிவர தெரியவில்லை..


இருப்பினும்,, நல்லதொரு திசையில் செல்லும் என்றொரு நம்பிக்கை உண்டு..


அன்பர்களுக்கு.. என் அன்பு வணக்கங்கள்..