Wednesday, 3 July 2013

சலனமற்று இருக்கிறேன்...

சலனமற்று இருக்கிறேன், 
சில நாட்களாய்.. 

மழலை பொழுதில், 
இந்த உலகில், 
நினைவு தெரிந்த நாளில், 
இருந்து, 
பல பொழுதுகளை, 
கடந்தாயிற்று.. 

தித்திக்கும், 
மழலை காலம், 
இன்பமான, 
இளமை காலம், 
தீரும் வரையில், 
பல காலங்களை, 
பல பொழுதுகள், 
வழியே கழித்தாயிற்று..

இந்த எல்லா காலங்களிலும், 
எல்லா பொழுதுகளிலும், 
என்னை வழிநடத்தியவை, 
அழகிய கனவுகள்.. 

நான் பச்சை புல்வெளியில், 
மெலிதான ஈர தென்றலை, 
உள்வாங்கி, 
களித்திருந்தேன்.. 

மெல்ல வெப்பம், 
என் உடலில் ஏறிய பொழுது, 
வெது வெதுப்பாய், 
உணர்ந்தேன்.. 

சூழலும், பொழுதுகளும், 
மாறி மாறி, 
உடன் வர, 
என் கனவுகளும், 
துணைக்கு வர, 
என் உழைப்பும், 
என்னுடன் இணைந்து, 
கொள்ள, 
வேகமெடுத்த காலத்தில், 
என்னை வேகமெடுக்க, 
மறந்து விட்டேன். 

அளவுக்கதிகமான கனவுகளில், 
என்னை தொலைத்து விட்டேன், 
போலும். 

நிதர்சன வாழ்வியல் பக்குவங்கள், 
புரிபடவே இல்லை. 

ஏச்சும், பேசும், 
ஏளனமும், அவமானமும், 
தொடர்ந்து சந்தித்த, 
பொழுதில், 
வெப்பம் சுள்ளென்று, 
உரைத்தது.. 

சுள்ளென்று உரைத்த வெப்பத்தில், 
திடுக்கிட்ட பொழுது, 
இளமை தீர துவங்கி, 
இருந்தது.. 

இப்பொழுது கடும் நெருக்கடியில், 
மன உளைச்சலில் இருக்கிறேன். 
தனித்து இருப்பது, 
போன்றே உணர்கிறேன்.. 

எங்கு, எப்படி, 
நடந்தது பிழை, 
என்று தெரியவில்லை. 

நான் மீண்டும், 
உயிர்க்க விரும்புகிறேன். 

இந்த நெருக்கடியில், 
நான் தப்பி, 
பிழைத்து விட்டால், 
நல்லதொரு வாழ்வியல், 
பயணத்தில், 
இணைந்து விடுவேன். 

ஆனால், 
தினசரி நிதர்சன, 
சூழல்கள், 
எனக்குள் அச்சத்தை, 
விதைத்து, 
என்னை புரட்டி கொண்டிருக்கிறது,.. 

நான், 
சலனமற்று இருக்கிறேன், 
சில நாட்களாய், 
அச்சமுற்ற மனதோடு.. 

Saturday, 15 June 2013

என் அடுத்த பிறவி...

என் அடுத்த பிறவியின், 
கனவுகள், 
துவங்கி விட்டன..

இந்த கோளின் , 
பெயர் தெரியவில்லை..
நிச்சயம் இது பூமி,
இல்லை..

நானும் மனிதன்,
என்ற உயிராக இல்லை..

நான் வேறு ஏதோ,
ஒரு உயிரினமாக,
இந்த பேரழகான,
கிரகத்தில்,
பிறந்திருக்கிறேன்..

இந்த கனவு,
பிடித்திருக்கிறது..

கனவுகள் பலிக்கும்,
என்று நம்புகிறேன்..

பொருளற்றவன்.

என்னென்னவோ தோன்றுகிறது, 
ஆழ்கடல் அமைதியில், 
சில வினாடிகள் ஓய்வும், 
எடுக்கிறது மனது.. 

ஒன்றும் புரிபடவில்லை.. 
எல்லாம் இழந்தாயிற்று.. 

இனி புதிதாய், 
துவங்கிட வேண்டும்.. 

புதிதாய் துவக்கம், 
எப்படி, 
எங்கே என்று, 
தடுமாறுகிறது, 
மனது.. 

நான் உயிர்த்தே , 
ஆக வேண்டும்.. 

அதற்கான, 
என் தேடலும், 
முயற்சியும், 
துவக்கமும், 
அவ்வப்போது தடம், 
புரண்டு கொண்டிருந்தாலும், 
ஒரு நம்பிக்கை, 
என்னை செலுத்தி கொண்டிருக்கிறது. 

நான் உயிர்த்தே ஆக வேண்டும். 
ஏனென்றால், 
என் இழப்புகள் நிறைய.. 

நான் உயிர்த்தே ஆகவேண்டும், 
ஏனென்றால், 
அற்றை நாட்களின், 
என்னை சுற்றிய, 
நட்பு, மற்றும்,  
உறவென்னும் வட்டத்தில், 
நகைப்பொலி கேட்கிறது, 
இந்த வினாடியில்.. 

நான் உயிர்த்தே ஆக வேண்டும். 
ஏனென்றால், 
பொருளற்ற என்னை கண்டு, 
இந்த சமூகம், 
சிரிக்கிறது..ஏளனமாக.. 

Thursday, 31 January 2013

யாருமற்றவன்

சற்றே சிரமம்,

கொண்டு,

நிதானம் பெற்று,

உறங்கிட முற்பட்டேன்,

பின்னிரவு ஒன்றில்..

*
சலசலவென்று,

அலைபாய்ந்த மனது,

அடங்க மறுத்தது..

எண்ண அலைகளின்,

அதி தீவிர தாக்குதல்களால்  , ,

நிலை குலைந்து போயிருந்தது,

மனது..

**
சீரற்ற இழப்புகளின்,

தொகுப்பாக இருந்தது,

எண்ண அலைகள்..

*
தொடர் தோல்வியின் வலிகள்,

மனதை ரணபடுத்தி இருக்க வேண்டும்..

சுற்றம், சூழல் கண்டு,

பின் என்னை கண்டு,

ஓவென்று கதறுகிறது,

தினம் பின்னிரவு பொழுதுகளில்..

**
உறக்கம்,

சமீபமாய் பின்னிரவுகளில்,

சுத்தமாக தொலைத்துவிட்டேன்.

**
ஒரு வெற்றி,

அசரடிக்கும் வெற்றி ,

அது மட்டுமே இன்றைய தேவை,

என் மனதிற்கு..

**
அதற்கு,

கடும் உழைப்பு ஒன்றே,

வழி என்றுணர்கிறேன்..

**
ஏனெனில்,

யாருமற்றவன் நான்,

வேறு வழி இல்லை..

Tuesday, 22 January 2013

காதலற்ற பொழுதுகளில்

காதலற்ற பொழுதுகளில்,

நான் உயிர்த்ததை விட,

காதலான பொழுதுகளில்,

நான் உயிர்த்திருப்பது,

சுகமான பொழுதுகள்..

*
அழகான பேரன்பால்,

அழகான காதலில்,

நான் உன்னோடு,,

காதலோடு..

சுகம்..

பிரியமுடன்

** பிரியமுடன் **

மௌனம் கலந்த,

உன் புன்னகையில்,

என் மனம் சிக்கிய,

வினாடியில் இருந்து,

இன்று வரை,

உன் மௌனம் கலைக்க,

போராடுகிறேன், மிக நேர்மையாக.

**
ஏதோ ஒரு தயக்கம்,

தடவிய உன் மௌனம்,

உதடு தாண்டி,

கலையும் நாளை,

எதிர்நோக்கி,

காத்திருக்கிறேன்.

**
என் தவிப்பும்,

உன் மௌனமும்,

ஒன்றிணையும் நாளை,

தினம் கனவுகளில்,

ரசிக்கிறேன்..

**
நிஜம் நாடி நிற்கும்,

மனது,

கனவு சுமக்கிறது,

இப்போதைக்கு..

Friday, 21 September 2012

பின்னிரவு பொழுதில்

அடங்க மறுக்கிறது,,

மனது..

தீரா நினைவலைகளை,

எழுப்பி விட்டு,,

என் மன சுவற்றில்,,

படபடவென்று மோதவிட்டு,,

என் உறக்கத்தை சிதறடிக்கிறது..

**
எங்கோ தூரத்தில்,

ஊளையிடும் ஓநாய் ஒலியை போல,,

கதறுகிறது மனது..

வெப்பம் கொண்ட,

பாலை நிலத்தில்,

இதயம் அறுந்து துடிக்கிறது.

**
எந்த சமாதானத்தையும் ஏற்க மறுத்து,,

இழந்து விட்ட,

இளமை நினைவுகளை,,

எழுப்பி விட்டு,,

அரற்றி கொண்டிருக்கிறது..

**
நான் ,,

மீண்டும் ஒருமுறை,,

உறக்கம் கலைந்த,,

பின்னிரவு பொழுதில்,

கலங்கியபடி..

**